ரஜினியின் 2.0 படம் நவம்பர்
29ம்
தேதி
திரைக்கு
வர
உள்ளது.
இத்தகவலை
இயக்குனர் சங்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் பட வேலைகள் தொடங்கப்பட்டன. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் இந்தப் படம் வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. பின்னர், குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்றனர். பின்னர், அதையும் மாற்றி ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்றனர். இறுதியில் அதையும் மாற்றி, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். ‘2.0’வுக்குப் பதிலாக ‘காலா’வை முதலில் ரிலீஸ் செய்தனர்.