Breaking

11 ஆண்டுகளுக்கு பின் டி.ராஜேந்தர் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்

டி.ராஜேந்தர் இயக்கும் படத்துக்குஇன்றையக் காதல் டாஎன்று பெயர் சூட்டியிருக்கிறார்.


இது முழுக்க முழுக்க காதல் கதை. இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப திரைக்கதை விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தையும் டி.ராஜேந்தரே செய்யப் போகிறார். சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.


இதில் கதாநாயகர்களாக 2 புதுமுகங்களையும், கதாநாயகிகளாக 2 புதுமுகங்களையும் அறிமுகம் செய்கிறார். நமீதா வில்லியாக நடிக்கிறார். ராதாரவி, இளவரசன், வெ..மூர்த்தி, தியாகு, பாண்டு, வி.டி.வி.கணேஷ், ரோபோ சங்கர், ஜெகன், முக்கிய வேடத்தில் டி.ஆரும் நடிக்கிறார்.