தமிழ்நாடு
பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11–ந் தேதி முதல்
ஆகஸ்டு 12–ந் தேதி வரை
நடைபெறுகிறது.
இந்தப்
போட்டிகள் சென்னை சேப்பாக்கம், நெல்லை இந்தியா சிமென்ட்ஸ், திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர் கல்லூரி
ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளன.
மொத்தம்
32 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மைதானங்களில் தலா 14 போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி உள்ளிட்ட 4 ஆட்டங்களும் நடக்க இருக்கின்றன.
தொடக்க
ஆட்டம் 11-ம் தேதி நெல்லையில்
நடைபெற உள்ள நிலையில், சங்கர் நகர் இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் இன்று டிக்கெட் விற்பனை தொடங்கியது. 50 ரூபாய் விலையில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
டிக்கெட்
வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். டிக்கெட் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், ஒரு நபருக்கு இரு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
